சுடச்சுட

    

    கேரள முன்னாள் டிஜிபி சென்குமாருக்கு மீண்டும் பணி: உச்சநீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 25th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    கொல்லம் மாவட்டம், புற்றிங்கல் கோயில் வெடிவிபத்தில் 110 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட கேரள முன்னாள் டிஜிபி சென்குமாரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    கேரள டிஜிபியாக சென்குமார் பதவி வகித்தபோது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியன்று புற்றிங்கல் கோயிலில் வாண வேடிக்கை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மிகப்பெரிய தீவிபத்து நேரிட்டது. இதில் பொது மக்கள் 110 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர்.
    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிஜிபி சென்குமாரை அந்த மாநில அரசு பணியிட மாற்றம் செய்தது. இதை எதிர்த்து சென்குமார் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கேரள அரசின் நடவடிக்கையை சரி என்றது. இதை கேரள உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
    இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சென்குமார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.பி. லோக்குர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர். மேலும், டிஜிபி சென்குமாரை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெற்றபோது, கேரள அரசு தரப்பில் தங்களது நடவடிக்கை சரியானதே என்று வாதிடப்பட்டது. அப்போது, 'பாதுகாப்பு குறைபாடுகளுக்காக சென்குமார் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை; புற்றிங்கல் கோயில் தீ விபத்து சம்பவத்தை அவர் கையாண்ட விதத்துக்காகத்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளை அவர் பாதுகாக்க முயன்றார்' எனத் தெரிவிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai