சுடச்சுட

  

  சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு

  By DIN  |   Published on : 25th April 2017 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sathiskar

  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவச் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்படும் சிஆர்பிப்எஃப் வீரர்கள்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே நேரத்தில் பெண்கள் உள்பட கருப்புச் சீருடையில் வந்த 300-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் நேற்று திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

  நக்ஸல் தீவிரவாதிகளின் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான தெற்கு பஸ்தர் பிராந்தியத்துக்கு உள்பட்ட சுக்மா மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.

  சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சிஆர்பிஎஃப் படையின் 74-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 99 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று திங்கள்கிழமை மதியம் அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நக்ஸல் தீவிரவாதிகள் ஏராளமானோர், அவர்களைச் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

  இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்த வீரர்களை மீட்டு ஹெலிகாப்டர்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிலரும், மருத்துவமனையில் சிலரும் இறந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது.

  இன்னும் சில வீரர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. தேடும் பணி முடிவடைந்த பிறகே, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரும் என்றார் அவர்.
  நிகழாண்டில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.

  இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai