சுடச்சுட

  

  சீனாவுக்கு எதிராக அருணாசலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 25th April 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருணாசலப் பிரதேசத்திலுள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடாநகரில் மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  அருணாசலப் பிரதேசத்திலுள்ள 6 இடங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை சீன மொழியில் மாற்றி அந்நாடு அண்மையில் அறிவித்தது. இதற்கு, அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  இந்நிலையில், சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அருணாசலப் பிரதேச மாணவர் அமைப்பினர் இடாநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சீனாவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் உருவபொம்மையை எரித்தனர்.
  இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹவா பகாங் தெரிவித்ததாவது: அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 6 இடங்களின் பெயர் மாற்ற விவகாரத்தில் மாநில அரசு அமைதியாக உள்ளது. இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai