சுடச்சுட

  

  'நாரதா: குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக மம்தா கோர வேண்டும்'

  By DIN  |   Published on : 25th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாரதா இணையதளம் வெளியிட்ட ரகசிய விடியோவில் லஞ்சம் வாங்குவது போல் சித்திரிக்கப்பட்ட அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
  மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக போலீஸார் கொடுமைகளை இழைப்பதாகக் குற்றம்சாட்டி, சூரி நகரில் பாஜக சார்பில் திங்கள்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கீய கூறியதாவது:
  திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் அடங்கிய ரகசிய விடியோ காட்சிகளை நாரதா இணையதளம் வெளியிட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அந்தக் காட்சிகளில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு மம்தா பானர்ஜி கேட்டுக் கொள்ள வேண்டும்.
  மேற்கு வங்கத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடத்தும் ஆட்சியால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பெண் முதல்வர் (மம்தா) ஆட்சி புரியும் மேற்கு வஙக்த்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன.
  மாநில அரசின் பாரபட்சம்: திரிணமூல் காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலைப் பின்பற்றி வருகிறது. இங்கு ஹிந்துக்களால் ராம நவமி போன்ற தங்கள் பண்டிகைகளைக் கொண்டாட இயலவில்லை. ஆனால் முஸ்லிம்கள் நடத்தும் முகரம் ஊர்வலங்களில் உரிய அனுமதியின்றி ஆயுதங்கள் கொண்டு செல்ல ஒப்புதல் தரப்படுகிறது.
  மேற்கு வங்க அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் நாங்கள் போராட்டம் மற்றும் மக்கள் இயக்கம் மூலம் இந்த ஆட்சியை அகற்றுவோம். திரிணமூல் காங்கிரஸ் அரசு அனைவரையும் பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai