சுடச்சுட

  

  பறவை மோதியதால் ஹெலிகாப்டர் தரையிறக்கம்: சித்தராமையா உயிர் தப்பினார்

  By DIN  |   Published on : 25th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணம் செய்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் திடீரென தரை இறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இருந்து முதல்வர் சித்தராமையா உயிர்தப்பினர்.
  ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா வட்டத்தின் சிராவண பெலகோலாவில் உள்ள கோமதீஸ்வர பகவான் பாகுபலி திருத்தலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமஸ்தாபிஷேக மகோற்சவம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, சிராவணபெலகோலாவில் ரூ.100 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பெங்களூரில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
  அந்த ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கிய ஒருசில நிமிடங்களில், பறவை ஒன்று அதன் மீது மோதியது. உஷாரான பைலட் முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டரை எச்ஏஎல் விமானநிலையத்தில் உடனடியாகத் தரை இறக்கினார்.
  இதைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், 2 பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் ஹெலிகாப்டரில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஹெலிகாப்டரை உடனடியாக தரை இறக்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரை ஆய்வு செய்த பிறகு, விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேரும் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் பயணம் மேற்கொண்டு, சிராவண பெலகோலா சென்றடைந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai