சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) மாவட்டத் தலைவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
    இதுகுறித்து ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிடிபி கட்சியின் புல்வாமா மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்துல் கனி தர். பிங்லேனா பகுதியில் அவர் மீது பயங்கரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தினர். 
    இதில் படுகாயமடைந்த கனி, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரையிலும் பொறுப்பேற்கவில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai