சுடச்சுட

  

  முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதா: பிரதமருடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

  By DIN  |   Published on : 25th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெலங்கானா அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  அரசுப் பணிகள் மற்றும் கல்வித் துறையில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 4 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதாவை தெலங்கானா அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.
  ஆனால், இஸ்லாமியர்களுக்கு 12 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்பட்சத்தில், அது இடஒதுக்கீட்டுக்கென உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருக்கும் வரம்பைக் காட்டிலும் அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக, தற்போது தெலங்கானாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  இந்தச் சூழ்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.
  அப்போது, தெலங்கானா அரசு கொண்டு வந்துள்ள முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  இவ்வாறு, இந்த மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இணைத்தால், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தாமலேயே இதனைச் சட்டமாக நிறைவேற்றிவிட முடியும். எனவே, இந்தக் கோரிக்கையை பிரதமரிடம் சந்திரசேகர ராவ் முன்வைத்திருக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai