சுடச்சுட

  

  ஹிமாசல முதல்வர் மீதான வழக்கு: சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 25th April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் (82) மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
  ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், கடந்த 2009 முதல் 2012 வரை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தபோது, அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 10 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.
  இதுதொடர்பான வழக்கு தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
  இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த மார்ச் 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
  இதில் வீரபத்ர சிங், அவருடைய மனைவி பிரதிபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சௌஹான் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரதிபா சிங் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
  மனுவில், 'சட்ட விதிகளின்படி சிபிஐ, வழக்கு விசாரணையை மேற்கொள்ளவில்லை. 
  எனவே தனக்கும், தனது கணவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்' என்று அவர் கோரியிருந்தார். 
  இதையடுத்து, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி சிபிஐ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai