சுடச்சுட

  
  Musharraf

  கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (73) தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
  மும்பையில் 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், ஹஃபீஸ் சயீதுக்கும் தொடர்பில்லை என்றே கருதுகிறேன். பாகிஸ்தானில், ஹஃபீஸ் சயீதை யாரும் பயங்கரவாதியாகப் பார்ப்பதில்லை.
  மேலும், இந்தியாவில்தான் அவரை பெரிய பயங்கரவாதியாக சித்திரிக்கிறார்கள். அமெரிக்காவில் கூட இத்தகைய நிலை இல்லை.
  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். ஆனால், அவர் அதற்கான முன்முயற்சிகளை எடுக்கவில்லை. பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடஉள்ளேன் என்றார் முஷாரஃப். 
  மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பின்னர், ஜூன் 2014-இல் ஜமாத்-உத் தாவாவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், அமெரிக்கா சார்பில் ஹஃபீஸ் சயீதின் தலைக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 64 கோடி) வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai