சுடச்சுட

  

  2032-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள், கார்! நீதி ஆயோக் திட்டம்

  By DIN  |   Published on : 25th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அடுத்த 15 ஆண்டுகளில் (2032-ஆம் ஆண்டுக்குள்) அனைத்து குடிமக்களுக்கும் கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள், இருசக்கர வாகனம் அல்லது கார், மின்சார வசதி, குளிர்சாதன இயந்திரங்கள், டிஜிட்டல் தகவல்-தொடர்பு வசதிகள் ஆகியவை கிடைக்கச் செய்து, புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற முன்னோடித் திட்டத்தை மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) வகுத்துள்ளது.
  மத்திய கொள்கைக் குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் அந்த அமைப்பின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், '2031-32 லட்சியத் திட்டம்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  அடுத்த 15 ஆண்டுகளில் அனைத்து குடிமக்களுக்கும் கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள், இருசக்கர வாகனம் அல்லது கார், மின்சார வசதி, குளிர்சாதன இயந்திரங்கள், டிஜிட்டல் தகவல்-தொடர்பு வசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டு, புதிய இந்தியாவுக்கு அடித்தளமிடப்படும்.
  முழுமையான எழுத்தறிவுடன் கூடிய சமுதாயம் உருவாக்கப்படும். அப்போது அனைவருக்கும் சுகாதார வசதிகள் எளிதாகக் கிடைக்கும். தவிர, மிகப் பிரம்மாண்டமான மற்றும் நவீன முறையிலான சாலை, ரயில், நீர்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்துத் தடங்கள் உருவாக்கப்படும்.
  தூய்மையான இந்தியா உருவாக்கப்பட்டு, குடிமக்கள் அனைவருக்கும் தரமான காற்றும், குடிநீரும் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடந்த 2015-16-இல் ரூ.1.06 லட்சமாக இருக்கும் தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம், வரும் 2031-32-இல் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.3.14 லட்சமாக இருக்கும்.
  அதேபோல், 2015-16-இல் ரூ.137 லட்சம் கோடியாக இருந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), வரும் 2031-32இல் ரூ.469 கோடியாக அதிகரிக்கும். கடந்த 2015-16-இல் ரூ.38 லட்சம் கோடியாக இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவுகள் வரும் 2031-32-இல் ரூ.92 கோடியாக அதிகரிக்கும். 2017-18 முதல் 2031-32 வரையிலான இந்த 15 ஆண்டு லட்சியத் திட்டம் மற்றும் 7 ஆண்டு செயல்திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
  இந்தியாவை வரும் 2031-32ஆம் ஆண்டுக்குள் ஆற்றல்மிக்க நாடாக மாற்றும் பிரதமர் மோடியின் லட்சியத்தை நிறைவேற்றவே அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
  இந்தியாவை செழிப்பான, ஆரோக்கியமான, பாதுகாப்பான, ஊழலற்ற, எரிசக்தி நிறைந்த, சுற்றுச்சூழல் ரீதியில் பசுமையான, உலக அளவில் செல்வாக்கு மிக்க நாடாக நாம் மாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதனிடையே, 2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான செயல்திட்டம் ஒன்றையும் நீதி ஆயோக் உருவாக்கியுள்ளது.
  அதன் பிரதிகள் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.
  விரைவில் அந்தச் செயல்திட்டம் இறுதிசெய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai