சுடச்சுட

  

  சத்தீஸ்கர் தாக்குதலில் பலியான 4 தமிழக வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

  By DIN  |   Published on : 25th April 2017 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CRPF

   

  சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில்  நேற்று மாலை மாவோயிச பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மத்திய சிறப்புக் காவல்படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

  மரணமடைந்த 25 பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சாவூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்டம் பெரியப்பூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai