சுடச்சுட

  
  pinarayi

  கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்தார்.
  கேரளத்தில் மின் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான எம்.எம்.மணி (70) இடுக்கி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அமைப்பின் பெண் ஆர்வலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
  இதையடுத்து, மணியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி பெண் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
  இந்நிலையில், பெண் தொழிலாளர்களுக்கு எதிராக தான் தவறான கருத்துகள் எதையும் வெளியிடவில்லை என்றும், தனது பேச்சு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாகவும் மணி தெரிவித்தார்.
  இந்நிலையில், கேரள சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை கூடியபோது மணி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின.
  பெண்களுக்கு எதிராக அமைச்சர் மணி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
  இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துப் பேசியதாவது:
  அமைச்சர் மணியின் பேச்சு ஊடகங்களால் திரித்தும், பெரிதுபடுத்தியும் கூறப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக, அவர் ஏற்கெனவே உரிய விளக்கம் அளித்துள்ளார். எனவே, இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai