சுடச்சுட

  

  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிஸா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 25 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சத்தீஸ்கரின் அண்டை மாநிலமான ஒடிஸாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள ஒடிஸாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், ஒடிஸா நக்ஸல் ஒழிப்பு போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
  ஒடிஸாவில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியக் கோயில், சிலிகா ஏரி, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  இதுகுறித்து ஒடிஸா டிஜிபி கே.பி. சிங் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  சத்தீஸ்கர் நக்ஸல் தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில எல்லையையொட்டிய ஒடிஸா பகுதிகள் சீலிடப்பட்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒடிஸாவில் வந்து பதுங்குவதே நக்ஸல்களின் திட்டமாக இருக்கும். அதனை முறியடிப்பதற்காகவே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai