சுடச்சுட

  
  mukhtar

  முஸ்லிம் சமூகத்தினருக்கு நல்ல கல்வியை அளிப்பதற்காக, நாட்டில் உள்ள ஒரு லட்சம் மதரஸாக்கள் (முஸ்லிம் மதப் பள்ளிகள்) நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் உள்ள ஹிந்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  நாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கு நல்ல கல்வியை அளிப்பதற்காக ஒரு லட்சம் மதரஸாக்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும். இது தொடர்பாக மத்திய அரசு அளிக்கும் நிதியுதவியானது இணையதளத்தில் அறிவிக்கப்படுவதன் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். இதில் இடைத்தரகர்கள் யாரும் ஆதாயமடைந்து விடக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.
  தரம் உயர்த்தப்பட உள்ள ஒரு லட்சம் மதரஸாக்களில் 25,000 மதரஸாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 12 மதரஸாக்களும் அடங்கும். அங்கு ஆசிரியர்கள், சிற்றுண்டி, கழிவறைகள் ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.
  உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் 100 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும். அவற்றுக்கான இடங்களை மாநில அரசு வழங்கும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai