சுடச்சுட

  

  கர்நாடகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு

  By DIN  |   Published on : 26th April 2017 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலம், பெலகாவியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயதான சிறுமியை செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்டனர்.
  பெலகாவி ஜன்ஜரவாடாவைச் சேர்ந்த அஜித்-சவிதா தம்பதியின் மகள் காவிரி (6). கடந்த 22-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார்.
  இதையடுத்து, அவரை மீட்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு போராடியது. ஆனால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
  இதுதொடர்பாக ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளர் சங்கரப்பா ஹிப்பரகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதானி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமண்சவதி முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai