சுடச்சுட

  

  சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

  By DIN  |   Published on : 26th April 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் நக்ஸல் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  சுக்மாவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நக்ஸல் தீவிரவாதிகளால் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
  இதுபோன்ற வன்முறை செயல்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு எதிரானதாகும். அப்பாவி மனிதரின் உயிரிழப்பானது, அது பாதுகாப்புப் படையினராக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி, மனித உரிமைகளை மீறும் செயலாகும். நாகரிக நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களும், மரணம் மற்றும் அழிவுக்கு காரணமாகும் இத்தகைய சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அந்த அறிவிப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai