சுடச்சுட

    

    சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்து சென்ற நக்ஸல்கள்: சுக்மா தாக்குதல் சம்பவம் குறித்து புதிய தகவல்

    By DIN  |   Published on : 26th April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை(சிஆர்பிஎஃப்) சேர்ந்த வீரர்கள் 25 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஏராளமான ஆயுதங்களை நக்ஸல் தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது சுமார் 300 நக்ஸல்கள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
    இதே பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் மீண்டும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:
    சுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காக 99 வீரர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 36 வீரர்கள் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
    அப்போது திடீரென அவர்களை சுற்றிவளைத்து நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டும், கண்ணி வெடிகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் சிஆர்பிஎஃப் வீரர்களால் சுதாரிக்க முடியவில்லை.
    எனினும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சில வீரர்கள் நக்ஸல்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 40 பேர் பாதுகாப்பாக தப்பிக்க முடிந்தது.
    இந்தத் தாக்குதல் சம்பவத்தில், ஏகே ரக துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள், பைனாகுலர்கள், புல்லட் புரூப் ஆடைகள், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை நக்ஸல்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
    இந்தத் தாக்குதலுக்கு மார்ச் மாத தாக்குதலின்போது கொள்ளையடித்த ஆயுதங்களையே நக்ஸல்கள் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், நக்ஸல்களுக்கு உள்ளூர் கிராம மக்கள், சிஆர்பிஎஃப் வீரர்களின் நடமாட்டம் குறித்து துல்லியத் தகவல் அளித்துள்ளனர்.
    உள்ளூர் மக்களை நக்ஸல்கள் பாதுகாப்பு கேடயமாகவும் பயன்படுத்தியுள்ளனர் என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai