சுடச்சுட

  

  தில்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக முன்னிலை

  By DIN  |   Published on : 26th April 2017 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி: தில்லி மாநகராட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப் 23) வாக்குப் பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

  தில்லி மாநகராட்சி 2012-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது தேர்தலாகும் இது. கடந்த மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 53.43 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 53.58 சதவீத வாக்குகள் பதிவானது.

  பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக அணி 73 வார்டுகளில் முன்னிலை வகித்து வருவதாகவும், காங்கிரஸ் 16 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 13 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ள பக்தாவர்பூர் வார்டில் அதிகபட்சமாக 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே சமயம் தெற்கு தில்லி மாநகராட்சியில் மதிபூர் வார்டில் அதிகபட்சமாக 61.6 சதவீதமும், குறைந்தபட்சமாக ஜாகீர் நகர் வார்டில் 41 சதவீதமும் பதிவாகின. இதேபோல கிழக்கு தில்லி மாநகராட்சியில் அதிகபட்சமாக சுந்தர் நகரி வார்டில் 63.62 சதவீதம்,  சகர்பூர் வார்டில் குறைந்தபட்சமாக 48.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தில்லி மாநகராட்சி 2012-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தால் மக்களின் தீர்ப்பை மதித்து தார்மிக அடிப்படையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai