சுடச்சுட

    

    நக்ஸல் தாக்குதல்: 2 வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்: உ.பி. அரசு

    By DIN  |   Published on : 26th April 2017 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
    இதற்கான முடிவு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது, சத்தீஸ்கரின் சுக்மாவில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனமும், இத்தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 25 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
    அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, சத்தீஸ்கர் தாக்குதலில் இறந்த தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தாருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
    முன்னதாக, சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் திங்கள்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai