சுடச்சுட

  

  நாரதா விவகாரம்: வழக்கை ரத்து செய்யக் கோரி திரிணமூல் எம்.பி. மனு

  By DIN  |   Published on : 26th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  APARUPA

  நாரதா ரகசிய விடியோ விவகாரத்தில் தனக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபரூபா போத்தார் எம்.பி., கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் அடங்கிய ரகசிய விடியோ பதிவை நாரதா இணையதளம் வெளியிட்டது. இதுதொடர்பாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
  இந்த வழக்கில் முகுல் ராய், சௌகதா ராய், அபரூபா போத்தார் உள்ளிட்ட 6 எம்.பி.க்கள், மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட 4 பேர், முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா, எம்எல்ஏ இக்பால் அகமது என திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  இந்நிலையில், அபரூபா போத்தார் எம்.பி., கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியள்ளதாவது:
  நாரதா இணையதளம் வெளியிட்ட விடியோ ஆதாரங்களை சிபிஐ கண்ணை மூடிக் கொண்டு நம்பியுள்ளது. இதுதொடர்பாக, என்னிடம் உரிய விளக்கம் கோரப்படவில்லை. அதற்கு முன்பாகவே, எனக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எனவே, அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
  இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி ஜாய்மால்யோ பக்சி அறிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai