சுடச்சுட

  

  மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உறவினர் பி.கே. நேருவின் மனைவி ஷோபா நேரு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 108.
  ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் கடந்த 1908-ஆம் ஆண்டில் பிறந்த ஷோபா நேருவின் இயற்பெயர் ஃபோரி ஆகும். பிரிட்டனில் கடந்த 1930-ஆம் ஆண்டில் கல்வி பயின்றபோது ஃபோரிக்கும், பி.கே. நேருவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த 1935-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, ஃபோரி தனது பெயரை ஷோபா நேரு என்று மாற்றிக் கொண்டார். நேரு குடும்பத்தின் முதல் வெளிநாட்டு பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்நிலையில், ஷிம்லாவில் ஷோபா நேரு செவ்வாய்க்கிழமை காலை காலமானார். கௌசாலியில் அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை (ஏப்.26) நடைபெறவிருக்கிறது. ஷோபா நேரு தனது வாழ்நாளில் 2 உலகப் போர்களை பார்த்துள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியா, இந்தியப் பிரிவினை ஆகியவற்றையும் அவர் பார்த்துள்ளார். மறைந்த ஷோபா நேருவுக்கு அசோக், ஆதித்யா, அனில் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai