சுடச்சுட

    

    போலி கடவுச்சீட்டு வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 26th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chhotarajan

    போலியான பெயரில் கடவுச்சீட்டு பெற்றது தொடர்பான வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
    சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன் (55).
    இவர் தில்லி மற்றும் மும்பையில் கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சோட்டா ராஜன் இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் கடந்த 2015- ஆம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.
    பின்னர், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
    முன்னதாக, அரசு அதிகாரிகள் 3 பேரின் உதவியுடன் சோட்டா ராஜன், மோகன் குமார் என்ற பெயரில் போலியான கடவுச்சீட்டைப் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதில் சோட்டா ராஜனும், அவருக்கு உதவிய ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளான ஜெயஸ்ரீ தத்தாத்ரேய ரஹதே, தீபக் நட்வர்லால் ஷா, லலிதா லட்சுமணன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் அறிவித்தார்.
    இந்நிலையில், சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் செவ்வாய்க்கிழமை
    அறிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai