சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு: நாடாளுமன்றக் குழு முடிவு

  By DIN  |   Published on : 26th April 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
  இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எதிர்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கும் அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான நாடாளுமன்றக் குழு (சட்டம் மற்றும் பணியாளர் நலன்), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதென்று தீர்மானித்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைகளை அளிக்கும்படி, நிபுணர்கள், பொது மக்களை அந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது என்று மாநிலங்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
  முன்னதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுக்கப்பட்டுள்
  ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai