சுடச்சுட

    

    முகநூலில் எழுதுவது எப்படி? மாணவர்களுக்கு கற்பிக்க டியு திட்டம்

    By புதுதில்லி  |   Published on : 26th April 2017 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Facebook

    முகநூலில் கல்வி சார்ந்து எழுதுவது எப்படி? என்பது தொடர்பாக தில்லி பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வளரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோருக்கு பயனுள்ள தளமாக "முகநூல்' திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், முகநூலில் சிறப்பான பதிவுகளை வெளியிடுவதில், தங்களது மாணவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தில்லி பல்கலைக்கழகம் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    முகநூலில் கல்வி சார்ந்து எழுதுவது எப்படி? என்பது தொடர்பாக ஆங்கில இலக்கியத் துறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி, அனைத்து கல்லூரி ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆய்வு செய்த பிறகு, இத்திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படும்.

    கல்வி சார்ந்து எழுதுதல், திறன் வளர்ப்பு உள்ளிட்டவற்றின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிழையின்றி எழுதவும், இலக்கியம் சார்ந்தவை மட்டுமின்றி பொதுவான விஷயங்கள் குறித்தும் எழுதவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்றார் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai