சுடச்சுட

  

  மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா

  By DIN  |   Published on : 26th April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Amit-Shah

  மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியை திரிணமூல் காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
  மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:
  மேற்கு வங்கம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலமாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இது இருக்கிறது. குறிப்பாக, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
  எனினும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே அது ஈடுபட்டு வருகிறது.
  'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் இத்தகைய வளர்ச்சி சென்றடைய திரிணமூல் காங்கிரஸ் அரசு அனுமதிப்பதில்லை.
  மோடி தலைமையிலான பாஜகவின் அசுர வளர்ச்சியைக் கண்டு திரிணமூல் காங்கிரஸ் அஞ்சுகிறது. அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பாஜக மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
  மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிபெறப்போவது உறுதி. வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் அதிக அளவிலான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றார் அமித் ஷா.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai