சுடச்சுட

  

  வாராக் கடன் பிரச்னைக்கு முன்னுரிமை: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

  By DIN  |   Published on : 26th April 2017 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jetly

  இந்திய வங்கித் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாராக் கடன் பிரச்னைக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  இகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
  வங்கிகளில் வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பது, மத்திய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவாலாகும். இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது.
  வங்கிகளில் கடன் வாங்கிய ஆயிரக்கணக்கானவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்து வாராக் கடன் பிரச்னை ஏற்பட்டுவிடவில்லை.
  வெறும் 20-லிருந்து 30 பேர் வரையிலான மிகப் பெரிய கடனாளிகள்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறார்கள்.
  இந்தியா போன்ற மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டுக்கு 20 - 30 கணக்குகளின் பிரச்னையை தீர்ப்பது மிகக் கடினமான பணியல்ல. எனினும், வங்கிகளால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை.
  இந்தப் பிரச்னை தொடர்ந்து நீடிப்பது வங்கித் துறையைக் கடுமையாகப் பாதிக்கிறது.
  வங்கிகளால் கடன்களை வசூலிக்க முடியாததற்குக் காரணம், அவற்றின் தலைமையில் உள்ள குறைபாடுகள் அல்ல. வங்கிகளின் செயல்பாட்டு முறையில்தான் குறை இருக்கிறது.
  தற்போதுகூட இந்தியாவின் ஊழல் தடுப்புச் சட்டம் தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தியதாக இருப்பதால், வங்கிகளால் உறுதியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. எங்களது ஆட்சியில் தொடந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
  இனி, வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதில்தான் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai