சுடச்சுட

  
  Delhi-Rajpath


  புதுதில்லி: தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக 184 வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 46 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

  தில்லி மாநகராட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப் 23) வாக்குப் பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

  தில்லி மாநகராட்சி 2012-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது தேர்தல் இது. இந்த தேர்தலில் 53.58 சதவீத வாக்குகள் பதிவானது.

  வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்தது. தொடர்ந்து 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக ஒட்டுமொத்தமாக 184 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

  தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 46 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் 30 வார்டுகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது.

  தில்லி மக்கள், பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தில்லி மாநகராட்சித் தேர்தலில் கடுமையாக உழைத்த பாஜக அணியினருக்கு நன்றியை உரித்தாக்குவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  இந்நிலையில், தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் மக்களின் தீர்ப்பை மதித்து தார்மீக அடிப்படையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai