சுடச்சுட

  

  உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: காங்கிரஸ் கோரிக்கை

  By DIN  |   Published on : 27th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீர மரணமடையும் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீது நக்ஸல்கள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பிலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் சார்பிலும் தனித்தனியே இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
  இந்நிலையில், அந்த இழப்பீட்டுத் தொகை ஒரே மாதிரியாக இல்லை என்றும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதாகவும் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் ஊடகங்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டுத் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது தங்களது இன்னுயிரை நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், அந்த இழப்பீட்டு நடைமுறை சீரானதாக இல்லை. மாநிலத்துக்கேற்ப அது மாறுபடுகிறது.
  அந்த நிலையை மாற்றி வீரமரணமடையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai