சுடச்சுட

  

  காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் மரணம்

  By குப்வாரா  |   Published on : 27th April 2017 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kashmir

  காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவ தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

  மேலும் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai