சுடச்சுட

  

  காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் 150 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்: இந்திய ராணுவம்

  By DIN  |   Published on : 27th April 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீரில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் படைப்பிரிவின் கமாண்டர் ஜே.எஸ். சாந்து, பாராமுல்லாவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவுவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இதேபோல், ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச், ரஜௌரி பகுதிகளுக்கு அருகே அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும்.
  கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் குறைந்துள்ளன.
  கடந்த ஆண்டு, எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவல்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. ஆனால், இந்த ஆண்டு, இதுவரையிலும் ஊடுருவல்களை நாம் தடுத்து விட்டோம்.
  பனிப்பொழிவும் நமக்கு ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுப்பதற்கு சாதகமாக இருந்தது. அதிக அளவில் பனிப்பொழிவு இருந்ததால், பயங்கரவாதிகளால் நமது பகுதிக்குள் ஊடுருவ முடியவில்லை.
  பயங்கரவாதிகள் நமது பகுதிக்குள் ஊடுருவ விடாமல் ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தும். இப்படி செய்வதால், பயங்கரவாதம் மேலும் வளராது என்றார் ஜே.எஸ். சாந்து.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai