சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பதவி தேர்தல்: சோனியாவுடன் சரத் பவார் ஆலோசனை

  By DIN  |   Published on : 27th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
  குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக
  பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
  இந்த சூழ்நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
  குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சரத் பவார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்துப் பேசியுள்ளார்.
  முன்னதாக, தில்லியில் சோனியா காந்தியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் அவரது பெயரும் அடிபடுகிறது. எனினும், சோனியா காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்யாதவ், அதை மறுத்தார்.
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai