சுடச்சுட

    

    குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத் திட்டம்: சிம்லாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    By சிம்லா  |   Published on : 27th April 2017 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    'உடான்' திட்டத்தை சிம்லாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    உள்நாட்டில் செயல்படாமல் இருக்கும் விமான நிலையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வைக்கும் நோக்கிலும், குறைந்த கட்டணத்தில் பல்வேறு பகுதிகளை விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் நோக்கிலும் மத்திய அரசால் 'உடான்' திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ளும் 'உடான்' திட்டத்தை ஹிமாசாலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முதல் கட்டமாக சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத், நாந்தேட்-ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 1 மணி நேரத்துக்குள்ளான பயணத்துக்கு ரூ.2,500 வரை விமானப் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai