சுடச்சுட

    

    சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: 'கோப்ரா' படையினர் காயம்

    By DIN  |   Published on : 27th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் அதிரடிப் படை கமாண்டோ பிரிவு ('கோப்ரா') வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்ஸல்கள் அண்மையில் தாக்குதல் நடத்தி 25 வீரர்களைக் கொன்ற இடத்துக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால், இதற்கு வேறு ஏதேனும் சதிச் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    சுக்மா மாவட்டத்தில் கோப்ரா படைப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், ஒரு வீரர் உள்பட 5 பேர் கொண்ட குழு ஹெலிகாப்டரில் கண்காணிப்புப் பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனர்.
    சிஆர்பிஎஃப் முகாம் அருகே ஹெலிகாப்டரைத் தரையிறக்க முயன்றபோது திடீரென விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் அதில் பயணித்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்ட பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai