சுடச்சுட

  

  ஜார்க்கண்ட் மாநிலம், லோஹர்தாகா மாட்டத்தில் 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
  இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
  'துப்பாக்கியை உதறிவிட்டு, கைப்பந்தை விளையாடு' என்ற திட்டத்தின் கீழ் மாவோயிஸ்டுகள் 10 பேரும் டிஐஜி ஏ.வி.ஹோம்கர், துணை ஆணையர் வினோத் குமார், காவல் துறைக் கண்காணிபாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் சரணடைந்தனர்.
  இவர்களில் 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு காவல் துறை தேடி வந்தது.
  நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் லோஹர்தாகா காவல் நிலையத்துக்கு இதுவொரு வெற்றியாகும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai