சுடச்சுட

  

  தோல்வியைத் தழுவிய பாஜக முஸ்லிம் வேட்பாளர்கள்!

  By புதுதில்லி  |   Published on : 27th April 2017 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 5 முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினர்.

  மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் மொத்தம் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், ஒருவரது வேட்பு மனு தள்ளுபடியானது. இதனால், மொத்தம் 5 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளில் களமிறக்கப்பட்ட இந்த 5 பேரும், முத்தலாக் முறைக்கு எதிராகவும், சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் பிரசாரத்தின்போது பேசினர்.

  இந்நிலையில், குரேஷ் நகர் வார்டில் போட்டியிட்ட ரூபீனா பேகம், ஜாகிர் நகரில் களம்கண்ட குன்வர் ரஃபி, சௌஹான் பங்கரில் போட்டியிட்ட சர்தாஜ் அகமது, முஸ்தஃபாபாதில் போட்டியிட்ட சப்ரா மாலிக், தில்லி கேட் வார்டு வேட்பாளர் ஃபைமுதீன் சாய்ஃபி ஆகிய பாஜகவின் 5 முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.

  இத்தேர்தலில், ஏற்கெனவே கவுன்சிலர்களாக இருந்தவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதில்லை என்று பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால், ரூபினா பேகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ரூபீனா பேகம், குரேஷ் நகர் வார்டு பாஜக கவுன்சிலராக இருந்த ஹூர் பனோவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai