சுடச்சுட

  

  பஞ்சாப் மாநிலம், லூதியாணாவில் உள்ள பருத்தி ஆலை ஒன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் தர்மன் நிம்ப்லே கூறியதாவது: லூதியாணாவில் உள்ள பருத்தி ஆலையில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஆலையில் குடும்பத்துடன் தங்கி தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தீ மளமளவென அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கும் பரவியது.
  தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்களுடன் அந்த தொழிற்சாலைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எந்தவித காயமுமின்றி 7 பேரை தொழிற்சாலையிலிருந்து மீட்டோம்.
  விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று தர்மன் நீம்ப்லே தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai