சுடச்சுட

  

  வங்கதேச எல்லையில் கால்நடைகளை கடத்த சுரங்கப்பாதை: கண்டறிந்து அழித்தது பிஎஸ்எஃப்

  By DIN  |   Published on : 27th April 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிகார் மாநிலத்தில் வங்கதேச எல்லையையொட்டி உள்ள வேலிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் கண்டறிந்து அழித்தனர்.
  இந்த சுரங்கப்பாதை கால்நடை கடத்தல் கும்பல்களால் அமைக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  இதுகுறித்து பிஎஸ்எஃப் டிஐஜி தேவி சரண் சிங், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  வங்கதேசத்துக்கு கால்நடைகளை கடத்திச் செல்வதற்காக இரு நாட்டு எல்லையில் உள்ள வேலிக்கு அடியில் 80 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து இரவு நேரத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பாதை கண்டறியப்பட்டு மூடப்பட்டுவிட்டது.
  எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் தேவி சரண் சிங்.
  வங்கதேசம்-இந்தியா இடையே 4,096 கி.மீ. தொலைவுக்கு எல்லை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai