சுடச்சுட

  

  விவசாயத் துறை வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கும் திட்டம் இல்லை

  By DIN  |   Published on : 27th April 2017 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arunjetle

  விவசாயத் துறையில் கிடைக்கும் வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
  விவசாயத் துறையில் கிடைக்கும் வருமானத்தின் மீதும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய கொள்கைக்குழு எனப்படும் நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேவ்ராய் வலியுறுத்தியுள்ள நிலையில் அருண் ஜேட்லியின் இத்தகைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  இதுதொடர்பாக தில்லியில் அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'விவசாயத் துறையில் கிடைக்கும் வருமானத்தின் மீது வரி' என்ற தலைப்பிலான நீதி ஆயோக் அமைப்பின் அறிக்கையைப் படித்தேன். அதுதொடர்பாக சில குழப்பங்கள் நிலவலாம். அதுபோன்ற வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
  விவசாயத் துறை வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை.
  முன்னதாக, நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 'விவேக் தேவ்ராய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அந்தக் கருத்தை நீதி ஆயோக் அமைப்பின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai