சுடச்சுட

    

    23 இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்த பாகிஸ்தான்

    By DIN  |   Published on : 27th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினர் (பிஎம்எஸ்ஏ) கைது செய்தனர்.
    குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து மீனவர்கள் 23 பேர், ஜாகாவில் சர்வதேச எல்லைப் பகுதி அருகே புதன்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினர், இந்திய மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர். மேலும் இந்திய மீனவர்களிடம் இருந்து 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
    கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் கராச்சிக்கு பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினர் கொண்டு சென்றுள்ளனர்.
    இதே பகுதியில் கடந்த 9-ஆம் தேதி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 40 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினர் கைது செய்து தங்களது நாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது இந்திய மீனவர்களின் படகு மீது பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினரின் படகு எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பாகிஸ்தானின் படகு பலத்த சேதமடைந்து மூழ்கியது. அந்தப் படகில் இருந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் 4 பேர் நீரில் மூழ்கினர். இதில் 2 பேரை இந்திய மீனவர்கள் உயிருடன் காப்பாற்றினர்.
    இதற்குப் பிரதிபலனாக, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 40 பேரையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அமைப்பினர் விடுவித்து விட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai