சுடச்சுட

  

  லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 27th April 2017 10:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sc

  புது தில்லி: லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  ஊழலை ஒழிக்க வகை செய்யும் சட்டம் லோக்பால் சட்டம். எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

  ஊழலை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

  மேலும், சட்டத்தின் இயங்கக் கூடிய ஒரு பகுதியே லோக்பால் சட்டம். லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை தாமதப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

  ஊழலை ஒழிப்பதற்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதுவரை லோக்பால் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai