சுடச்சுட

  

  பி.எஃப். கணக்கில் இருந்து மருத்துவச் செலவுக்காக இனி எளிதாக பணம் எடுக்கலாம்

  By DIN  |   Published on : 27th April 2017 04:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  epf


  சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, ஒருவர் தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க, தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து சுய-அறிவிப்பு (self-declared) அறிக்கையை அளித்து பணத்தை பெறும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  முன்பு, ஒரு தொழிலாளி தனது பிஎஃப் கணக்கில் இருந்து மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க வேண்டும் என்றால், தான் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதத்தையும், மருத்துவர் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

  இது குறித்து பரிசீலனை செய்த மத்திய தொழிலாளர் துறை, இது குறித்து ஏப்ரல் 25ம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி, தனது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் பெற, பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாக ஒப்புதலையும், மருத்துவர் சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசின், சுய-அறிக்கைக் கொள்கையின் கீழ், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளி, தனது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்பு 3 விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது. இனி, பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க ஒரே ஒரு விண்ணப்பமே போதுமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது.

  ஒரு மாத காலத்துக்கும் மேல் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலையிலோ, பெரிய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போதோ அல்லது காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், இதய நோய்களுக்கு சிகிச்சை பெறும் போதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

  அதே போல, மாற்றுத் திறனாளிகளும், தங்களுக்குத் தேவையான உபகரணங்களை, இனி சுய-அறிக்கை அளித்தே பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai