சுடச்சுட

  

  ஒடிஸா கடற்கரையையொட்டி அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து நடுத்தர வகையைச் சேர்ந்த அக்னி-3 ஏவுகணையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவிச்சோதித்தது.
  இந்த ஏவுகணை அங்குள்ள நான்காவது ஏவுதளத்தில் இருந்து காலை 9.12 மணிக்கு ஏவப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.
  இந்திய ராணுவத்தில் ஏவுகணைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட தனிப் பிரிவான எஸ்எஃப்சி, இந்தச் சோதனையை மேற்கொண்டது.
  இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடிய அக்னி ஏவுகணை வரிசையில் அக்னி-3 இடம்பெறுகிறது. இது 1.5 டன் வரை எடைகொண்ட மரபுசார்ந்த ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சுமந்தபடி 3,000 முதல் 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்ததாகும்.
  இரண்டு அடுக்குகள் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணையானது 17 மீட்டர் நீளமும், 2,200 கிலோ எடையும் கொண்ட
  தாகும். இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, அக்னி-3 ஏவுகணைச் சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  முன்னதாக, அக்னி ஏவுகணையானது இந்திய ராணுவத்தில் கடந்த 2011 ஜூன் மாதம் சேர்க்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai