சுடச்சுட

  
  YogiAdityanath

  அயோத்தியில் தசரா பண்டிகையின்போது நடத்தப்பட்டு வந்த ராமலீலை நாடகத்தை, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  மேலும், மதுராவில் கிருஷ்ணர் வாழ்க்கையைக் கூறும் ராஸலீலை நாடகத்தையும், சித்திரகூடத்தில் பஜனைக் கச்சேரிகளையும் நடத்த அவர் உத்தவிட்டுள்ளார்.
  தசரா பண்டிகையின்போது அயோத்தியில் ராமலீலை நாடகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சில காரணங்களுக்காக அந்த நாடகங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்தது.
  இந்த நிலையில், அயோத்தியில் ராமலீலை நாடகத்தை மீண்டும் நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரப் பிரதேச மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டார்.
  மேலும், மதுரா நகரில் ராஸலீலை நிகழ்ச்சியையும், சித்திரகூடம் நகரில் பஜனைக் கச்சேரிகளையும் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai