சுடச்சுட

  

  உ.பி.: வங்கி மேலாளரைத் தாக்கியதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 28th April 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேசத்தில் வங்கி மேலாளரைத் தாக்கியதாக பாஜக எம்எல்ஏ கேசர் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  உத்தரப் பிரதேச மாநிலம், நவாப்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் கேசர் சிங். இவர் அதே பகுதியில் செயல்படும் பரோடா கிராமிய வங்கிக் கிளைக்கு புதன்கிழமை சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த வங்கி மேலாளரிடம் ஒரு விவசாயியின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் குறித்து அவர் விசாரித்ததாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வங்கி மேலாளரை கேசர் சிங் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
  இதையடுத்து, வங்கி மேலாளரை தமது இருப்பிடத்துக்கு வலுகட்டாயமாக அழைத்துச் சென்ற கேசர் சிங், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதாக உத்தரவாதக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து நவாப்கஞ்ச் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் எம்எல்ஏ கேசர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் டிஐஜி ஆஷுதோஷ் குமார் தெரிவித்தார்.
  போலீஸ் அதிகாரியை மிரட்டிய எம்.பி.: இதனிடையே, பாராபங்கி தொகுதி எம்.பி.யான பிரியங்கா ராவத், காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் குன்வர் ஞானஜெய் சிங்கை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், எம்.பி. பிரியங்கா ராவத் மிரட்டியது உண்மை எனத் தெரியவந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எஸ்.பி. வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai