சுடச்சுட

  

  ஒடிஸா: ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மே 18-இல் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்

  By DIN  |   Published on : 28th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒடிஸா சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் மாநில சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் அடுத்த மாதம் (மே) 18ஆம் தேதி நடைபெறும் என்று மாநில சட்டப் பேரவை விவகாரங்களுக்கான துறை வெளியிட்டிருக்கும் அறிவிக்கை தெரிவித்துள்ளது. மேற்கண்ட துறை இது தொடர்பாக எடுத்த முடிவுக்கு மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  ஜிஎஸ்டி மசோதா தவிர, ஒடிஸா வாட் வரி சட்டத் திருத்த மசோதாவும் இந்த சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கை சுட்டிககாட்டியிருக்கிறது.
  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்தந்த மாநில மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  இதற்கிடையில் ஜிஎஸ்டி மசோதாவை எம்எல்ஏக்கள் மத்தியில் விளக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பயிலரங்கமும் மேற்கண்ட சிறப்புக் கூட்டத்துக்கு முன் நடத்தப்படவிருக்கிறது என்று
  அதிகாரிகள் தெரிவித்தனர்.
  நெல்லுக்கு ஆதரவு விலை: இதற்கிடையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கணிசமாக உயர்த்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை சட்டப் பேரவைத் தலைவர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான அவைக் குழு விரைவில் சந்திக்கவிருக்கிறது.
  இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அவைக் குழு ஜூன் மாதத்தில் நேரம் கேட்டிருக்கிறது.
  வழக்கமாக ஜூன், ஜூலையில் நெல்லுக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதற்கு முன்னதாக இது தொடர்பான மனு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பூஜாரி தெரிவித்தார்.
  கடந்த முறை கடைசியாக கூடிய பேரவைக் கூட்டத்தில் நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,470-இல் இருந்து ரூ.2,930-ஆக அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2,500-ஐ நிர்ணயிக்குமாறு கோரி கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசை ஒடிஸா வலியுறுத்தி வருகிறது என்று மாநில வேளாண் அமைச்சர் மகாரதி குறிப்பிட்டார்.
  விவசாயிகளின் வேளாண் உற்பத்திச் செலவைக் காட்டிலும் 50 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் நெல்லுக்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனினும் தனது தேர்தல் வாக்குறுதியை மிகவும் எளிதாக மறந்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தார்மிக ரீதியில் மோடி அரசுக்கு பொறுப்பு இருக்கிறது என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா சுட்டிக்காட்டினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai