சுடச்சுட

  

  கர்நாடகத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தல்: குமாரசாமி கணிப்பு

  By DIN  |   Published on : 28th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kumarasamy

  கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
  ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  அண்மையில் நடைபெற்ற குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு இடைத் தேர்தல் முடிவுகள், சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் ம.ஜ.த.வைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளேன்.
  வரும் நாள்களில் மாவட்ட, வட்ட அளவில் மஜத நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயார் செய்யத் திட்டமிட்டுள்ளேன். கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைவதைத் தடுக்க மாட்டேன்.
  பெற்ற தாய் போன்றது கட்சி. அந்த தாய்க்கு துரோகம் நினைப்பவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான். மாற்றுக் கட்சிகளிலிருந்து ம.ஜ.த.வில் இணைய பலர் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான எச்.விஸ்வநாத் விரைவில் ம.ஜ.த.வில் இணைய உள்ளார்.
  அவருடன் ஏற்கெனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மாற்றுக் கட்சியில் உள்ளபோது அவர் ம.ஜ.த.வை சாடியுள்ளார். அரசியலில் இது இயல்பானது. கட்சியில் இணைந்த பிறகு கட்சியின் கொள்கையை ஏற்று நடப்பது முக்கியம்.
  முதல்வர் சித்தராமையா ம.ஜ.த.வில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
  தற்போது அந்த கட்சியில் இணைந்து முதல்வராக ஆகியுள்ளதை அனைவரும் அறிவர்.
  கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ம.ஜ.த.வை பலப்படுத்துவோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai