சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை அதிகாலையில் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
  ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில், 'ஜெய்ஷ்-ஏ-முகமது' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்டனர்.
  இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் பஞ்ச்காம் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
  இந்தத் தாக்குதலில் ராணுவ அதிகாரி ஆயுஷ் உள்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
  இந்தத் தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தின் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai