சுடச்சுட

  

  கொஹிமாவில் நேதாஜி ராணுவ அருங்காட்சியகம்: அறிஞர்கள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 28th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகாலாந்து தலைநகர் கொஹிமா மற்றும் ருஸாஷோ கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
  நாகாலாந்தின் பேக் மாவட்டம், ருஸாஷோ கிராமத்தில் 'கொஹிமா போரும், சுதந்திரப் போராட்டத்தில் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நிறைவடைந்தது.
  நாகாலாந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு மேம்பாட்டு சங்கம், ஃபுட்ùஸரோ அரசுக் கல்லூரி, சாகெஸாங் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.
  கருத்தரங்கின் நிறைவு நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொஹிமாவில் இந்திய தேசிய ராணுவம் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
  நேதாஜி தலைமையிலான அந்தப் படை பயன்படுத்தி, தற்போது எஞ்சியுள்ள ஆயுதங்கள், சீருடைகள், கொடி, ரூபாய் நோட்டுகள், புத்தகங்கள், இந்திய தேசியப் படை குறித்த ஆவணப் படங்கள் முதலானவை அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்.
  இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி வருகை தந்த ருஸாஷோ கிராமத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்.
  இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு குறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள, ஆய்வாளர்களை மத்திய அரசும், நாகாலாந்து அரசும் ஊக்கப்படுத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai