சுடச்சுட

  

  ஜாதவின் உடல்நலம் குறித்த சான்று: பாகிஸ்தானிடம் கோரியது இந்தியா

  By DIN  |   Published on : 28th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவின் உடல்நலம் குறித்த சான்றினை அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.
  இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே வியாழக்கிழமை கூறியதாவது:
  குல்பூஷண் ஜாதவ் ஓராண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் அவரை இதுவரை யாரும் சந்திக்க முடியவில்லை. ஆதலால், அவரது உடல்நலம் குறித்து அறிய வேண்டியது அவசியமாகியுள்ளது.
  இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குல்பூஷண் ஜாதவின் உடல்நலம் குறித்த சான்றினை வழங்குமாறு பாகிஸ்தான் அரசிடம் அவர் கோரியுள்ளார் என்றார் கோபால் பாக்லே.
  வெளிப்படையான விசாரணை - பாகிஸ்தான்: இதனிடையே, குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai