சுடச்சுட

  

  ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் அந்த மாநிலத்துக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  இதன்மூலம், வரும் ஜூலை மாதம் முதல் தேதி முதல் அந்த மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காகவே கூட்டப்பட்ட சிறப்பு பேரவைக் கூட்டத்தில், மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சி.பி. சிங் 'ஜார்க்கண்ட ஜிஎஸ்டி மசோதா'வை தாக்கல் செய்தார்.
  அதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிறகு செய்தியாளர்
  களிடம் சி.பி. சிங் தெரிவித்தார்.
  ஏற்கெனவே, தெலங்கானா, பிகார் ஆகிய மாநிலங்களின் பேரவைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  குஜராத்திலும், அந்த மாநிலத்துக்கான ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கான சிறப்பு பேரவைக் கூட்டம், அடுத்த மாதம் 9-ஆம் தேதி கூடும் என்று அந்த மாநில பேரவை விவகாரத் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai